என்று மங்கையற்கரசியாரைப் புகழ்ந்து பாடுகிறார், காழிப்பிள்ளையாரான திருஞானசம்பந்தர். அப்படியொரு பெருமை, மங்கையர்க்கரசியாருக்கு! வளவர் என அறியப்பட்ட சோழர்குலத்து இளவரசி, மதுரைக் கூன்பாண்டியனை மணந்து பாண்டிமாதேவியாகிறாள். சமணத்தில் மூழ்கிச் சைவத்தை மறந்துதுறந்த அவனைச் சைவத்துக்கு ஈர்க்கிறாள். அப்படிப்பட்ட மண உறவுகொண்டு நட்புடன் பழகிய சோழரும், பாண்டியரும் எப்படிப் பரமவிரோதிகள் ஆனார்கள்? சோழருக்கும் பாண்டியருக்கும் தீராப்பகை உருவான காரணத்தை இப்புதினத்தின் இரண்டாம் பாகத்து இடைச்செருகல் தெரிவிக்கிறது.
இப்புதினம் அருண்மொழித் தேவர், இராஜராஜசோழப் பேரரசராகத் தஞ்சைப் பெரியகோவிலைக் கட்டியபின்னர் தொடங்குகிறது. அவரது தமிழ்க்கனவையும், அவரது பேரரசு முழுவதும் தமிழன்னை கோலோச்ச, அதற்கு அவரது குரு கருவூர்த்தேவர் தீட்டிக்கொடுத்த திட்டத்தையும் விவரிக்கிறது.
கல்கி உலகத்தமிழர்களிடையே நன்கு அறியப்பட்ட தமிழ் வார இதழாகும். இது முதன் முதலில் எழுத்தாளர் கல்கி கி. கிருஷ்ணமூர்த்தியால் 1941-இல் ஆரம்பிக்கப்பட்டது. அவருக்குப் பின்னர் டி. சதாசிவம், கல்கியின் புதல்வர் கி. ராஜேந்திரன், புதல்வி சீதா ரவி ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர். தற்போது ஆசிரியராக இருப்பவர் கல்கியின் பேத்தி லஷ்மி நடராஜன் ஆவார்.