பெரும்பாலோருக்கு சமூகம் என்றால் குடும்பம்; மற்றவர்களுக்கு உறவும் நட்புமே சமூகம் என்றாகிறது. இவர்கள் சொல்வதே அவர்களின் வாழ்வை நிர்ணயிக்கிறது. அதனால், சமூகத்திற்குக் கட்டுப்பட்டு வாழ்வதையே பெரும்பாலும் விரும்புவர்.
இதனுள் புகுந்துள்ள உண்மைகளும், பலன்களும், ஒவ்வாத சில பின் விளைவுகளும் ஓராயிரம் இருப்பினும், ஓரளவு சில கவன ஈர்ப்பு குணாதிசயங்களை வெளிப்படுத்தும் வகையில், என்னால் இயன்றதை, நான் கவனித்து உள்வாங்கிக் கொண்டதன் அடிப்படையில் எழுதியிருக்கிறேன்.
அனுராதா சௌரிராஜனாகிய நான் தனியார் வங்கியில் பணிபுரிந்து, ஓய்வு பெற்று,தமிழின் மேல் உள்ள காதலாலும், சமூகப் பொறுப்புணர்வுகளாலும் உந்தப் பட்டு எழுதுவதை என் முழு நேர விருப்பமாக்கிக் கொண்டேன். தற்சமயம் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன்! என் எழுத்துக்களை உள்வாங்கி வாசிப்பவரின் மேலான விமர்சனங்களே என்றும் என் பேனாவின் தீராத மை.