ஸ்கூலும் ,கார்ப்ரேட் ஆபீஸும் சேர்ந்தா என்னாகும்? ம்ஹூம்.. அதிகபட்சம் ஒரு வெர்க் ஷாப் ப்ரோகிராம் நடத்தலாம்.வேற என்ன பண்ணமுடியும்..ம்..நான் ஒரு அழகான வீடு பண்ண டிரை பண்ணிருக்கேன். பார்ப்போம் எப்பிடி இருக்குன்னு?
நம்ம ஊரில் இப்போ எல்லாம் பொண்ணுங்களை அவ்வளவு ஈஸியா ஏமாத்தவெல்லாம் முடியறதில்லை. ஆட்டம் போடுற பசங்களை , மாட்டுக்கு வைக்கிற தவுட்டு தண்ணியையே அசால்ட்டா குடிக்க வைக்கிற அலட்டிக்காத பொண்ணுங்க தான் இப்போ ஜாஸ்தி. அப்பிடி ஒரு பொண்ணு தான் நம்ம ஜோ,அவ பிச்சு பெடலெடுக்க போற ஹிரோ கார்த்திக்.இவங்க ரெண்டு பேரும் எப்பிடி மீட் பண்ணிணாங்க, எப்பிடி இந்த பய ,நம்ம மார்டன் பூலான்தேவிகிட்ட மாட்டிக்கிட்டான்.சிக்கின நம்ம பய எஸ்கேப் ஆவானா?ம்ச்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, இந்த அழகான வீட்டுகுள்ளே கொஞ்சமா அழுகை, நிறையா அதிரடி, ஏகப்பட்ட துள்ளலான சந்தோஷம் எல்லாம் இருக்கும்.
நான் செட்டிநாட்டின் மகள் ,உணவும் உபசாரமும் அணுகளின் அங்கமாய் இருப்பதினாலோ என்னவோ எனக்கு உணவு ரொம்பவும் பிடிக்கும். சமைக்கவும்! சாப்பிடவும் ! நாவிற்கு நல்லன செய்யும் உணவுக்கு நான் ரசிகை ! கடந்து செல்லும் மனிதர்களை முடிந்த அளவு படிக்க பிடிக்கும்.அதனாலோ என்னவோ மனிதவள துறையில் பயணிக்கிறேன். இயற்கை, இசை,இனம், இயல்பு,மனிதம் என எல்லாவற்றையும் ரசிக்க ஆரம்பித்தால் அடுத்து புனைவது கவிதையும் கதையுமே, நானும் அப்படியே. இழுத்து பிடித்து வைக்கும் எதுவும் இயல்பை கெடுத்துவிடும். என் படைப்புகள் இயல்புகளோடு பயணித்து சற்று நேரம் படிப்பவர்களின் ஞாபகத்தில் இளைப்பாறி ,சிரித்த முகத்தோடு கடந்து சென்றுவிடும் !நிறைய சந்தோஷத்தை மிச்சமிட்டுவிட்டு ! தத்தி தத்தி நடைபழகி 5 இணைய புத்தகங்கள் வெளியிட்டு இருக்கிறேன்.உங்கள் கருத்துக்கள் எனது படைப்புகள் மெருகேற உதவும். ஆகவே உங்கள் கருத்துக்களை படித்துவிட்டு பதிவு செய்யவும்! நன்றி !