இந்த கதை நிச்சியமா இலக்கியம் சார்ந்தது இல்லை..நம் வாழ்க்கையில்,நாம ரசிக்கிற நம்மை சுற்றி இருக்கிற மனிதர்களை, நட்பை, சின்ன சின்ன சந்தோஷகளை பற்றிய கதை தான்.இது ஒரு அப்பார்ட்மெண்ட் கம்மியூனிட்டியில் இருக்கும் நாலு நண்பர்களை பற்றியது.இதில் ஒரு பெண் மீரா கோபாலன். மற்றவர்கள் ரஞ்சித், அமீன், வெங்கிட்டு.ஐ !!! நான் புடிச்சுட்டேன் இவங்க மூணு பேரில் யாரை மீரா கல்யாணம் பண்ண போறா அதானே ஸ்டோரி?? என்கிறீர்களா.ஸ்டீரியோ டைப் படங்களையும்,சீரியலையும் பார்த்த வந்த தன் விளைவு தான் இது !!! ம்ச்.. அது எல்லாம் போர் அடிச்சு போய் தானே இதை படிக்க வர்றீங்க..இங்கேயும் எதுக்கு அதையே படிச்சுகிட்டு?? இந்த நாலு நண்பர்களின் வாழ்க்கையில் இருக்கும் நிறைய நட்பு,கொஞ்சம் காதல், அதைவிட ரொம்ப கொஞ்சமாக சோகம், இது எல்லாத்தையும் விட நிறைய சந்தோஷம்னு அவங்க வாழ்க்கையோடு சேர்ந்து பயணபட போகிறோம்.
வெல்கம் டூ உறிமாடப்பூக்கள் !!!