இந்த உணவுகள் அனைத்தும் எந்தவித எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தாது. நமது உடலுக்கு அதிக சக்தியையும் வலுவையும் கொடுக்கும். என்னுடைய நூலை நல்லமுறையில் வெளியிட முன் வந்திருக்கும் புஸ்தகா.காம் மேலாளர் அவர்களுக்கு நன்றி.
நான் சிறுவயதாக இருக்கும் போது என்னுடைய அம்மா தானிய உணவுகளை அடிக்கடி செய்து கொடுத்தார். அவருடைய வழிகாட்டுதலின் அடிப்படையில் நான் கற்றுக் கொண்ட பாரம்பரிய உணவுகள் தான் இவை. நான் பொதிகை தொலைக்காட்சியில் இந்த பாரம்பரிய உணவுகளை செய்து காட்டியபோது வாசகர்கள் கடிதம் மூலமாக வாழ்த்தினர். அதன் உற்சாகத்தில் நான் மேலும் மேலும் நமது பாரம்பரிய உணவுகளை பல வகையான சமையல்களை செய்து பார்த்து உங்களுக்கு தந்திருக்கிறேன்.
நமது பாரம்பர்ய உணவை செய்து பாருங்கள். பகிர்ந்து கொள்ளுங்கள் வாழ்த்துக்கள்.