அப்பாக்களை எடை போடவும், விமர்சிக்கவும் எந்த பிள்ளைகளுக்கும் உரிமை இல்லை. அவர் வாழ்க்கையை எடை போட்டுப்பார்க்க உங்கள் தராசுக்கு இயலவே இயலாது சில விஷயங்களை எழுதவே என் வாழ்நாள்போதாது என நினைக்கிறேன். எனக்கு தெரிந்தவைகளை மட்டுமே கூடுமானவரைக் கொடுத்திருக்கிறேன். ஒருவர் வாழ்க்கை வரலாற்று குறிப்புகளை தரும்போது, அவருடன் தொடர்புள்ள மற்றவர்கள் மனம் நோகாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை இயன்றவரை செய்திருக்கிறேன்.
பொது மருத்துவ நிபுணர், 33 வருட மருத்துவ ஆசிரியராக அனுபவம் உள்ளவர். 200-க்கு மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள், 7 மருத்துவ நூல்களை எழுதியுள்ளார். தற்போது அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வராக உள்ளார்.