பல நேரங்களில் இவற்றை படித்து ரசிப்பதற்குள் அழைக்கும் கைபேசி எடுத்து பேசி முடித்தபிறகு படிக்க நினைத்து பார்த்தால் பாதியில் காணாமல் போயிருக்கும், தேடினாலும் கிடைக்காது வீடியோ வடிவில் வரும் கவிதைகளை கேட்க, ரசிக்க, அவற்றை எழுத அலுவலக வேலைகளுக்கு இடையே நேரமிருக்காது வீட்டில் வந்து பார்த்துக்கொள்ளலாம் என்றால் திறந்து படிக்க வலை இணைப்போ, செல் போன் சிக்னலோ பேட்டரியில் பவரோ சிலசமயம் மூன்றுமோ இருக்காது. பேட்டரியில் சார்ஜ் போட்டுக்கொண்டே பேசுவதும் உபயோகிப்பதும் ஆபத்தென்பதால் பிறருக்கு அறிவுரை சொல்லும் மருத்துவனான, நானே அதை மீற முடியாது எனவே தான் இந்த புத்தகம், பயணத்தின் போது, ஓய்வின் போதும் கைபேசிக்கு சார்ஜ் போடும்போதும், எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் படிக்கலாம், ரசிக்கலாம், ருசிக்கலாம். புத்தகத்தை கையில் தொடமாட்டென் என்று சத்தியம் செய்த தலைமுறைக்காக குறைந்த செலவில் கிண்டிலில் பதிவிறக்கம் செய்தும் படிக்கலாம் இதை எழுதிய, பகிர்ந்தவர்களில் பெயர் குறிப்பிட்டவகளின் பெயர்களை கூடுமான வரை தந்திருக்கிறேன்.
பொது மருத்துவ நிபுணர், 33 வருட மருத்துவ ஆசிரியராக அனுபவம் உள்ளவர். 200-க்கு மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள், 7 மருத்துவ நூல்களை எழுதியுள்ளார். தற்போது அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வராக உள்ளார்.