கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் என்ற முன்னோர்கள் வார்த்தையை மெய் பிக்கும் வண்ணம் அநேக ஆலயங்கள் நிறைந்து விளங்குகிறது நம் பாரத தேசம்.
சிவாலயங்களும், வைஷ்ணவ ஸ்தலங்களும், சக்தி பீடங்களும் ஆதி சங்கரர் போன்ற மாடாதிபதிகளாலும், அநேக அரசர்களாலும் சிற்பவேலைகள் மிகுந்து கலை நயத்துடன் உருவாக்கப் பட்டது. ஆலயங்கள் நம் நாட்டின் பொக்கிஷங்கள்.
அப்படிப்பட்ட ஆலயங்களில் சிலவற்றைப் பற்றிய சிறப்புகளை அனைவரும் அறியும் வண்ணம் அஷ்டலஷ்மிகளால் எழுதப் பட்ட கதைத் தொகுப்பு ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
நம் நாட்டில் உள்ளவர்களும் வெளி நாட்டிலிருந்து சுற்றுலா வருபவர்களுக்கும் இந்த புத்தகத்தில் உள்ள தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்த நூலின் ஆசிரியர் உமா அபர்ணா pachydermtales-ன் துணை நிறுவனர். ஆம்பல் எனும்தமிழ் பிரிவின் தலைவர். கிட்டதட்ட 400 புத்தகங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். இவரது முதல் புத்தகம் கண்ணாடி விற்பனையில் இரண்டாம் இடத்தை பிடித்தது. தமிழ்நாடு விமன்ஸ் அச்சீவர் அவார்ட்ஸ், தமிழ் இலக்கிய பெருவிழா முதலியவற்றை சிறந்த முறையில்நடத்தியுள்ளார். சிறந்த எழுத்தாளருக்கான பரிசுகளை வாங்கியுள்ளார். ஆருஷி, கிராம புறமாணவர்களின் எழுத்துகளை புத்தகம் ஆக்கல், வகுப்பெடுத்தல், மலைவாழ் மக்களின் நலனுக்கு உதவி செய்தல் வயதான பெண்களின் திறமைகளை வெளிக்கொணர்தல், சிறப்பு குழந்தைகளுக்கான மெய்நிகர் நிகழ்வு இவற்றை தம் குழுவுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறார்.