நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்து பாடியுள்ள திருத்தலங்கள் திவ்ய தேசங்கள் எனப்படும்.
அன்று “தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்" என்று சொன்ன பிரகலாதனின் வாக்கை சர்வ வியாபியான பகவான் நிறைவேற்றவில்லையா? அதுபோல, இதோ 16 பேர்களால் எழுதப்பட்ட திவ்ய தேசங்களில், எங்கும், இங்கும் உள்ள பெருமாளை சேவிப்போம் வாருங்கள்.
இந்த நூலின் ஆசிரியர் உமா அபர்ணா pachydermtales-ன் துணை நிறுவனர். ஆம்பல் எனும்தமிழ் பிரிவின் தலைவர். கிட்டதட்ட 400 புத்தகங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். இவரது முதல் புத்தகம் கண்ணாடி விற்பனையில் இரண்டாம் இடத்தை பிடித்தது. தமிழ்நாடு விமன்ஸ் அச்சீவர் அவார்ட்ஸ், தமிழ் இலக்கிய பெருவிழா முதலியவற்றை சிறந்த முறையில்நடத்தியுள்ளார். சிறந்த எழுத்தாளருக்கான பரிசுகளை வாங்கியுள்ளார். ஆருஷி, கிராம புறமாணவர்களின் எழுத்துகளை புத்தகம் ஆக்கல், வகுப்பெடுத்தல், மலைவாழ் மக்களின் நலனுக்கு உதவி செய்தல் வயதான பெண்களின் திறமைகளை வெளிக்கொணர்தல், சிறப்பு குழந்தைகளுக்கான மெய்நிகர் நிகழ்வு இவற்றை தம் குழுவுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறார்.