சேக்கிழார் தமது பெரிய புராணத்தில், குறிப்பிட்டுள்ள 63 நாயன்மார்களும் சிவ பக்தியில் திளைத்து, தம் வாழ்வை சிவ பக்திக்காகவே அர்ப்பணித்தவர்கள். சமண மதம் மக்களை மட்டுமின்றி மன்னனையும் ஆக்கிரமிக்கத் தலை தூக்கி, சைவ மத நம்பிக்கையைக் குறைத்துக் கொண்டிருந்த நேரம்!
சைவ மதத்தில் உறுதியான ஈடுபாடு காட்டிய சிவனடியார்கள் அம்மதத்தைத் தழைக்கச் செய்ய எடுத்துக்கொண்ட முயற்சியும்,ஈசனிடம் காட்டிய அளவிலா பக்தியும் அவர்களை நாயன்மார்கள் என உலகிற்கு அறிமுகம் காட்டியுள்ளது.
அவர்களைப் பற்றி அறிந்து கொள்வதும், அவர்களின் கூற்றுப்படி, இறைபக்தியைப் புரிந்து கொள்வதும் நம்மைச் செம்மைப்படுத்திக் கொள்ளும் நற்செயல் ஆகும். அத்தகைய பெருமை வாய்ந்த நாயன்மார்கள் சிலரின் வரலாற்றினை இந்நூலில் அஷ்டலெஷ்மி எழுத்தாளர்களைக் கொண்டு எழுதவைத்து, பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனத்தார் வெளியிட்டுள்ளனர். அதனை அனைவரும் பக்தியுடன் படித்து இன்புறுவோம்!
இந்த நூலின் ஆசிரியர் உமா அபர்ணா pachydermtales-ன் துணை நிறுவனர். ஆம்பல் எனும்தமிழ் பிரிவின் தலைவர். கிட்டதட்ட 400 புத்தகங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். இவரது முதல் புத்தகம் கண்ணாடி விற்பனையில் இரண்டாம் இடத்தை பிடித்தது. தமிழ்நாடு விமன்ஸ் அச்சீவர் அவார்ட்ஸ், தமிழ் இலக்கிய பெருவிழா முதலியவற்றை சிறந்த முறையில்நடத்தியுள்ளார். சிறந்த எழுத்தாளருக்கான பரிசுகளை வாங்கியுள்ளார். ஆருஷி, கிராம புறமாணவர்களின் எழுத்துகளை புத்தகம் ஆக்கல், வகுப்பெடுத்தல், மலைவாழ் மக்களின் நலனுக்கு உதவி செய்தல் வயதான பெண்களின் திறமைகளை வெளிக்கொணர்தல், சிறப்பு குழந்தைகளுக்கான மெய்நிகர் நிகழ்வு இவற்றை தம் குழுவுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறார்.