நமது வாழ்க்கையில் பல அதிசயமான ஆச்சரியமான நிகழ்வுகள் நடந்திருக்கும். நாமா இதைச் செய்தோம்? நமக்கா இது நடந்தது என வியந்து நம்மை நாமே உணர ஒரு வாய்ப்பாக அவை அமைந்திருக்கும்.
நமது எழுத்தாளர்கள் தங்கள் வாழ்வில் சந்தித்த சிலிர்க்க வைத்த அனுபவங்களை ‘நின்னைச் சரண்டைந்தேன் 'எனும் நூலில் எழுதியுள்ளனர். ஆன்மீக பலமும் இறையுணர்வும் பலர் வாழ்வில் நிகழ்த்திய அதிசயங்களைப் பற்றிய தொகுப்பு இது.
இந்த நூலின் ஆசிரியர் உமா அபர்ணா pachydermtales-ன் துணை நிறுவனர். ஆம்பல் எனும்தமிழ் பிரிவின் தலைவர். கிட்டதட்ட 400 புத்தகங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். இவரது முதல் புத்தகம் கண்ணாடி விற்பனையில் இரண்டாம் இடத்தை பிடித்தது. தமிழ்நாடு விமன்ஸ் அச்சீவர் அவார்ட்ஸ், தமிழ் இலக்கிய பெருவிழா முதலியவற்றை சிறந்த முறையில்நடத்தியுள்ளார். சிறந்த எழுத்தாளருக்கான பரிசுகளை வாங்கியுள்ளார். ஆருஷி, கிராம புறமாணவர்களின் எழுத்துகளை புத்தகம் ஆக்கல், வகுப்பெடுத்தல், மலைவாழ் மக்களின் நலனுக்கு உதவி செய்தல் வயதான பெண்களின் திறமைகளை வெளிக்கொணர்தல், சிறப்பு குழந்தைகளுக்கான மெய்நிகர் நிகழ்வு இவற்றை தம் குழுவுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறார்.