தெய்வத்தின் திருவருள் இல்லாமல் எந்தச் செயலும் நடைபெற முடியாது.
தெய்வ பக்தியும், ஆன்மீக சிந்தனையுமே நமது பாரத நாட்டின் தனிச் சிறப்பாகும். தமது பக்தியால் நாட்டைப் பெருமைப்படுத்திய, பல பாகவதப் பெரியவர்களில் பதினான்கு பக்தர்களைப் பற்றிய தொகுப்பே இந்த "உய்விக்கும் நாம ஸ்மரணம்" ஆகும்.
இந்த நூலின் ஆசிரியர் உமா அபர்ணா pachydermtales-ன் துணை நிறுவனர். ஆம்பல் எனும்தமிழ் பிரிவின் தலைவர். கிட்டதட்ட 400 புத்தகங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். இவரது முதல் புத்தகம் கண்ணாடி விற்பனையில் இரண்டாம் இடத்தை பிடித்தது. தமிழ்நாடு விமன்ஸ் அச்சீவர் அவார்ட்ஸ், தமிழ் இலக்கிய பெருவிழா முதலியவற்றை சிறந்த முறையில்நடத்தியுள்ளார். சிறந்த எழுத்தாளருக்கான பரிசுகளை வாங்கியுள்ளார். ஆருஷி, கிராம புறமாணவர்களின் எழுத்துகளை புத்தகம் ஆக்கல், வகுப்பெடுத்தல், மலைவாழ் மக்களின் நலனுக்கு உதவி செய்தல் வயதான பெண்களின் திறமைகளை வெளிக்கொணர்தல், சிறப்பு குழந்தைகளுக்கான மெய்நிகர் நிகழ்வு இவற்றை தம் குழுவுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறார்.